திருகோணமலையில் இளம் வர்த்தகர் கடத்தப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

திருகோணமலையில் இளம் வர்த்தகர் கடத்தப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2018 | 7:56 pm

திருகோணமலையில் இளம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

கடந்த வௌ்ளிக்கிழமை இந்த வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை அநுராதபுரம் சந்தியில் வசித்து வந்த வர்த்தகர் ஒருவரே கடத்தப்பட்டுள்ளார்.

22 வயதான குறித்த வர்த்தகர் கடந்த ஐந்தாம் திகதி தொழில் நிமித்தம் நகருக்கு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனை அடுத்து கடந்த ஆறாம் திகதி அடையாளம் தெரியாத ஒருவரால் அவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

வர்த்தகரின் கடத்தல் தொடர்பில் திருகோணமலை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்