ஶ்ரீலங்கன் விமான சேவையை புதிய இடைக்கால நிர்வாக சபை பொறுப்பேற்க உள்ளதாக தகவல்

ஶ்ரீலங்கன் விமான சேவையை புதிய இடைக்கால நிர்வாக சபை பொறுப்பேற்க உள்ளதாக தகவல்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2018 | 9:36 pm

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளர் சபையின் இராஜினாமா கடிதங்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதையடுத்து புதிய இடைக்கால நிர்வாக சபை விமான சேவையை பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

முதலீட்டு சபையின் முன்னாள் தலைவரான திலான் விஜேசிங்க இந்த சபையின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்களை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஒரு சில தினங்களுக்குள் இடம்பெறும் எனவும் தற்போதைய பணிப்பாளர் சபையின் இராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கம் அறிவித்தவுடன் புதிய அதிகாரிகள் செயற்பாடுகளை ஆரம்பிப்பார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பணிப்பாளர் சபையிலுள்ள ஹரேந்திர கே.பால பட்டபெந்தி தவிர்ந்த ஏனைய 6 பேரும் இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.

ஹரேந்திர கே.பால பட்டபெந்தி இராஜினாமா செய்யாவிட்டாலும் புதிய இடைக்கால நிர்வாக சபையில் அவரது இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

விமான சேவையின் தற்போதைய பிரதம நிறைவேற்றதிகாரி சுரேன் ரத்வத்த அந்த பதிவியில் தொடர்வார் எனவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்