முறிகள் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதத்திற்காக பாராளுமன்றத்தை கூட்டுங்கள் – பிரதமர்

முறிகள் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதத்திற்காக பாராளுமன்றத்தை கூட்டுங்கள் – பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2018 | 2:54 pm

முறிகள் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்திற்கு பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கெம்பல் மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டின் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட மாஅதிபருக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

மேலும், பாராளுமன்றத்திலும் அந்த அறிக்கை குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வௌிப்படை தன்மையுடன் தாம் செயற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தை கூட்டுவதில் எவ்வித சிக்கல்களும் எல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்