முச்சக்கரவண்டி பதிவுகள் 20 வீதத்தால் குறைவு

முச்சக்கரவண்டி பதிவுகள் 20 வீதத்தால் குறைவு

முச்சக்கரவண்டி பதிவுகள் 20 வீதத்தால் குறைவு

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2018 | 4:19 pm

முச்சக்கரவண்டி பதிவுகள் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளாாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது

இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்தல் மற்றும் அதற்காக சலுகைகளை வழங்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் மே்றகொண்டமை, முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதில் வீழச்சி ஏற்பட்டமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 35 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு மாத்திரம் வாகன போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான சட்டத்தை எதிர்காலத்தில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளமையும் ஒரு காரணம் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் சுமார் 12 இலட்சம் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்