மக்கள் சக்தி கிராமங்கள் தோறும் குளங்கள் தோறும் தேசிய நடவடிக்கை இன்றும் தொடர்ந்தது

மக்கள் சக்தி கிராமங்கள் தோறும் குளங்கள் தோறும் தேசிய நடவடிக்கை இன்றும் தொடர்ந்தது

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2018 | 7:48 pm

நெல் உற்பத்தியில் தன்னிறைவு நாடாக விளங்கிய நாம் இன்று கப்பல்களில் அரிசி வரும் வரை ஏன் காத்திருக்க நேரிட்டுள்ளது.

எதிர்காலத்தில் சுத்தமான குடிநீரும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் வரை காத்திருக்க நேரிடுமா?

இது தொடர்பில் சிந்திக்குமாறு அழைப்பு விடுத்து, நாம் இன்றும், மக்கள் சக்தி கிராமங்கள்தோறும் குளங்கள்தோறும் தேசிய நடவடிக்கையை முன்னெடுத்தோம்.

பல வருடங்களாக மக்கள் சக்தி திட்டம் ஊடா கிராம மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த நியூஸ்பெஸ்ட், மக்களுடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளை தீர்வினை வழங்குவதை கடமையாக எண்ணி நிறைவேற்றியது.

கிராமங்கள் தோறும் சென்று பிரச்சினைகளை ஆராய்ந்த போது நாட்டின் பெருமளவான மக்கள் நீர் பிரச்சினையால் பாதிக்கப்படுவதை அறிந்து கொண்டோம்.

இத்தகைய பிரச்சினை நாட்டில் உருவெடுப்பதற்கான காரணம் என்ன?

புராதன வாவிக் கட்டமைப்பு அழிவடைந்துள்ளமை இதற்கு ஒரு காரணம் என்பது எமது ஆய்வுப் பயணத்தில் தெரியவந்தது.

இந்த நீர்ப்பாசனத் திட்டங்களை புனரமைக்காது எத்தகைய பிரம்மாண்ட நீர்விநியோகத் திட்டங்களை செயற்படுத்தினாலும் அது பலனளிக்காது என்பதே மக்களின் நிலைப்பாடாகும்.

பேராதனை பல்கலைக்கழக நீர்ப்பாசன தொழில்நுட்ப அறிவினையும் ஒன்றிணைத்து மக்கள் சக்தி கிரமாங்கள் தோறும், குளங்கள் தோறும் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டின் நீர்ப்பாசன தொழில்நுட்பத்தினை மீண்டும் உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெல்லன்கடவல வாவி கட்டமைப்பிற்கு நீரை வழங்கிய கும்புக்ஹிட்டி நீரூற்றை தேடி எமது பயணம் தொடர்ந்தது.

புராதன நீர் விநியோகத் திட்டம் தொடர்பில் ஆராயும் எமது பயணம் நாளையும் தொடரவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்