கொத்மலை இராணுவ முகாமில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் உயிரிழப்பு

கொத்மலை இராணுவ முகாமில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் உயிரிழப்பு

கொத்மலை இராணுவ முகாமில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Jan, 2018 | 3:56 pm

கம்பளை – கொத்மலை இராணுவ முகாமில் பயிற்சிக்காக சென்றிருந்த விமானப்படை வீரர் ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் நேற்று (05) உயிரிழந்துள்ளார்.

மொரவெவ விமானப்படை முகாமைச் சேர்ந்த விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வழமைபோல் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த விமானப்படை வீரர் திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான கல்பாய – மிஹிந்தலையை வதிவிடமாகக் கொண்ட ஏ.எம். சுசந்த அத்தநாயக்க எனும் விமானப்படை வீரரே உயிரிழந்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்