ஶ்ரீ லங்கன் விமான நிறுவன கண்காணிப்புச் சபை உறுப்பினர்களின் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

ஶ்ரீ லங்கன் விமான நிறுவன கண்காணிப்புச் சபை உறுப்பினர்களின் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 7:46 pm

ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் கண்காணிப்புச் சபை உறுப்பினர்களின் இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டார்.

புதிய கண்காணிப்புச் சபையொன்றை நியமிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அஜித் டயஸ், கண்காணிப்புச் சபையின் உறுப்பினர்களான சானக்க டி சில்வா, ஜோசப் ராஜன் பிரிட்டோ, நிரஞ்சன் டி சில்வா, தேவ ஆதித்ய, மஹிந்த ஹரதாச மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரகித ஜயவர்தன ஆகியோரின் கையொப்பத்துடன் நிறுவனத்தை மீள் வியூகப்படுத்துவதற்கான திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இராஜினாமா செய்வதற்கு தயாராகவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

கண்காணிப்புச் சபையின் உறுப்பினர் ஒருவர் அதில் கையொப்பமிடவில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை மீள் வியூகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு, இந்த இராஜினாமா விடயம் தொடர்பில் கடந்த புதன்கிழமை கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்