இலங்கை போக்குவரத்து சபை வட பிராந்திய ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

இலங்கை போக்குவரத்து சபை வட பிராந்திய ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 4:24 pm

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இணைந்த தொழிற்சங்கத்தினர் இடையில் இன்று முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவன் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர்.

பேச்சுவார்த்தைகளின் பின்னர் நேற்று (04) பிற்பகல் 3 மணியளவில் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.

எனினும், புதிய பஸ் நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வௌி மாவட்ட பஸ் ஒன்று நுழைந்ததால் அமைதியின்மை ஏற்பட்டதுடன் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை இடம்பெற்ற மற்றுமொரு பேச்சுவார்த்தையின் மூலம் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட தீர்மானம் எட்டப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்