ரயில் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

ரயில் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

ரயில் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 3:25 pm

ரயில் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் ஆறு பேர் உள்ளடங்குவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் இந்த குழுவிற்குத் தலைமை வகிக்கின்றார்.

பஸ் கட்டணம் அதிகரித்துள்ள போதிலும் ரயில் கட்டணங்களில் எவ்வித திருத்தங்களும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இதனை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டில் இருந்து ரயில் கட்டணங்களில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லையென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்