யாழ். சந்திலிப்பாயில் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

யாழ். சந்திலிப்பாயில் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 4:04 pm

யாழ்ப்பாணம் – மானிப்பாய், சந்திலிப்பாய் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சந்திலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (04) பிற்பகல் மீட்கப்பட்ட இந்த சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேதப் பரிசோதனை இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்