தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 3:35 pm

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் இன்று திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சருடன் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் முன்னறிவிப்பில்லாத இந்த போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

திருச்சி, மதுரை, கோவை, சேலம், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை.

எனினும், பொலிஸாரின் பாதுகாப்புடன் மதுரை மாவட்டத்தில் பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

சம்பள உயர்வு கோரியே போக்குவரத்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை 2.57 வீத சம்பள உயர்வு வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.44 வீதமே ஊதிய உயர்வு மாத்திரமே வழங்க முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசின் தீர்மானத்தை ஏற்க மறுத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்