பிபிலையில் வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

பிபிலையில் வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

பிபிலையில் வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 3:43 pm

பிபிலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (04) மாலை பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

52 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனது வயோதிபத் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பிபிலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபிலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்