தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெண் வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெண் வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெண் வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 7:14 pm

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெண் வேட்பாளர் ஒருவரது வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி நகர சபை வேட்பாளர் சோமசுந்தரம் சந்திரிக்காவின் வீட்டின் மீதே நேற்று (04) நள்ளிரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளல் அல்லது அவமானப்படுத்துதல், அவர்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் மற்றும் அவர்களின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக அரசியலமைப்பின் 104 ஆவது சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்