டெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் பயிற்றுநராக ரிக்கி பொண்டிங் நியமனம்

டெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் பயிற்றுநராக ரிக்கி பொண்டிங் நியமனம்

டெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் பயிற்றுநராக ரிக்கி பொண்டிங் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 4:35 pm

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் டெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பொறுப்பை வகித்த ராகுல் ட்ராவிட் அதிலிருந்து விலகியதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய A மற்றும் 19 வயதிற்குட்பட்ட அணியின் பயிற்றுநராக ராகுல் ட்ராவிட் நியமிக்கப்பட்டதால் தமது அணியின் பயிற்றுநர் பொறுப்பை துறந்ததாக டெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹெமன் டுஹா தெரிவித்துள்ளார்.

இதனால் அந்தப் பொறுப்பிற்கு ரிக்கி பொண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்டியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் 2008 முதல் 2013 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ள ரிக்கி பொண்டிங் 2015, 2016 ஆம் ஆண்டுகளில் மும்பை இன்டியன்ஸ் அணியின் பயிற்றுநராகவும் செயற்பட்டுள்ளார்.

இன்டியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இவ்வருடத்திற்கான போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்