சவுதியிலிருந்து தங்காபரணங்களை சட்டவிரோதமாகக் கொண்டுவர முயன்றவர் கைது

சவுதியிலிருந்து தங்காபரணங்களை சட்டவிரோதமாகக் கொண்டுவர முயன்றவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 3:56 pm

சவுதி அரேபியாவிலிருந்து தங்காபரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காபரணங்களை 6 பயணப்பொதிகளில் மிக சூட்சுமமாக மறைத்து வைத்துக் கொண்டு வர முற்பட்ட போதே சுங்க திணைக்களத்தினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காபரணங்களின் மொத்த பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனையைச் சேர்ந்த 49 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்