ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆ. கணேசமூர்த்திக்கு எதிராக இலஞ்சக் குற்றச்சாட்டு

ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆ. கணேசமூர்த்திக்கு எதிராக இலஞ்சக் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 8:23 pm

ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆ. கணேசமூர்த்திக்கு எதிராக இன்று ஊவா மாகாண ஆளுநரின் செயலாளரிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஊவா மாகாண சபை உறுப்பினராகவிருந்து பின்னர் கடந்த 17 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட ஆ. கணேச மூர்த்திக்கு எதிராக இன்று சிலர் மனுவொன்றைக் கையளித்தனர்.

ஊவா மாகாண ஆளுநரின் செயலாளர் எச்.எல். சோமதலிகவிடம் மனு கையளிக்கப்பட்டது.

மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை இலஞ்சமாகப் பெற்றார் என குற்றம் சுமத்தி இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 17 பேர் இவ்வாறு மனு சமர்ப்பித்துள்ளனர். பின்னர் பதுளை பொலிஸில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்