ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய பகிரங்கப் பிடியாணை

ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய பகிரங்கப் பிடியாணை

ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய பகிரங்கப் பிடியாணை

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 4:48 pm

நீதிமன்றத்தைப் புறக்கணித்தமைக்காக அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் இலங்கை தூதுவராக செயற்பட்ட போது, தூதுவராலயத்திற்கான கட்டடத்தை கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசிற்கு சொந்தமான ஒரு இலட்சத்து 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதிக்குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இதன் பின்னர் ஜாலிய விக்ரமசூரிய மருத்துவ தேவைகளுக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

அவரின் வௌிநாட்டுப் பயணத்திற்கு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த போதிலும், நிபந்தனைகளின் அடிப்படையில் செயற்படாமையால் நிதிக் குற்றப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய, பகிரங்க பிடியாணைக்கான உத்தரவை மன்று இன்று பிறப்பித்துள்ளது.

ஜாலிய விக்ரமசூரியவின் பிணையாளிகளான அவருடைய மனைவி உள்ளிட்ட நால்வர் இன்று மன்றுக்கு ஆஜராகியிருக்கவில்லை.

இந்நிலையில், அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்