E.T.I மற்றும் சுவர்ணமஹால் நிதி நிறுவனம் தொடர்பில் மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தல் தீர்மானம்

E.T.I மற்றும் சுவர்ணமஹால் நிதி நிறுவனம் தொடர்பில் மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தல் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 8:01 pm

E.T.I FINANCE LIMITED மற்றும் சுவர்ணமஹால் FINANCIAL SERVICES நிறுவனங்கள் தொடர்பில், இலங்கை மத்திய வங்கி ஒழுங்கு முறைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் பலவீனமான நிதியியல் செயலாற்றத்தை கருத்திற் கொண்டு மத்திய வங்கியின் நாணயச் சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இரண்டு நிறுவனங்களினதும் வைப்பாளர்கள் மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களின் நல உரித்துக்களை பாதுகாக்கும் நோக்குடனும், நிதியியல் முறையில் பாதுகாப்பினையும் உறுதி செய்வதே இதன் நோக்கம் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய E.T.I FINANCE LIMITED மற்றும் சுவர்ணமஹால் FINANCIAL SERVICES PLC நிறுவனங்களின், நடவடிக்கைகளை முகாமை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்க நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

முதிர்ச்சியடைகின்ற வைப்புக்களின் மீளப்பெறுகையினை கட்டுப்படுத்தல் மற்றும் அத்தகைய வைப்புக்களை ஆறு மாத காலப்பகுதிக்கு மீள் புதுப்பித்தல் மற்றுமொரு தீர்மானமாகும்.

இணங்கப்பட்ட நியதிகள், நிபந்தனைகளுக்கு இணங்க வைப்புக்களுக்கான வட்டி நிலுவையினை செலுத்துவதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் குறித்த நிறுவனங்களின் வைப்பீட்டாளர்களுடன், பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய முடியும் என்பதுடன், ஏற்புடைய பொருத்தமான முதலீட்டாளருக்கு வசதியளிக்க முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்