ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் சிறுத்தை கடித்து ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் சிறுத்தை கடித்து ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 5:42 pm

ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் சிறுத்தை கடித்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 16 வயது சிறுவனொருவனும் அடங்குவதாக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை கடிக்குள்ளான பெண்ணொருவர் உள்ளிட்ட 5 பேர் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் இன்று பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

33 வயதான பெண்ணொருவரும் 34 மற்றும் 42 வயது ஆண்கள் மூவர் அடங்களாக ஐந்து பேர் சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

தோட்டத்தில் தொழில் புரிந்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை சிறுத்தை தூக்கிச் சென்றுள்ளது.

இதன்போது கூச்சலிட்ட பெண்ணை சிறுத்தை தாக்கியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தோட்டத்தில் தொழில்புரிந்துக் கொண்டிருந்த ஏனைய ஆண்களும் அங்கு சென்று சிறுத்தையை துரத்துவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதன்போது குறித்த ஆண்களும் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

எவ்வாறாயினும் சிறுத்தை தொடர்ந்தும் காட்டுப் பகுதியில் மறைந்துள்ள நிலையில் அதனை பிடிப்பதற்கான முயற்சிகளை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்