வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் நாடு முழுவதும் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவு

வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் நாடு முழுவதும் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 6:37 pm

இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் நாடு முழுவதும் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்களுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர கூறியுள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் 183,046 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் 427 பேர் உயிரிழந்துள்ளதாக டொக்டர் பிரஷீலா சமரவீர நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சலால் மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான மரணங்கள் சம்பவித்துள்ளன.

2016 ஆம் ஆண்டு 55,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன் அவர்களில் 98 பேர் உயிரிழந்தனர்.

2015 ஆம் ஆண்டு 35,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தததுடன் 54 மரணங்களே சம்பவித்ததாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டார்.

டெங்கு நுளம்பின் தாக்கம் காலை 6 மணியிலிருந்து 8 மணிவரையும், மாலை 4 மணியிலிருந்து 7 மணிவரையும் அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே மக்கள் சுற்றுப்புறச் சூழலை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்