யாழ்ப்பாணத்தில் மர்மக் காய்ச்சல் பரவுவதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை

யாழ்ப்பாணத்தில் மர்மக் காய்ச்சல் பரவுவதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 7:46 pm

யாழ். குடா நாட்டில் மர்மக் காய்ச்சல் பரவுவதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என யாழ். போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த.சத்தியமூர்த்தி இன்புலவன்ஸா பீ வகை தொற்று காரணமாகவே அண்மையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதே வேளை முல்லைத்தீவு மாவட்டத்திலும் கடந்த மாதம் இன்புலுவன்ஸா பீ வகை தொற்றினால் 9 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்