மோட்டார் வாகன பதிவு கடந்த ஆண்டில் வீழ்ச்சி

மோட்டார் வாகன பதிவு கடந்த ஆண்டில் வீழ்ச்சி

மோட்டார் வாகன பதிவு கடந்த ஆண்டில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 9:31 am

2017 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்களின் பதிவு குறைவடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் நான்கு இலட்சத்து 48 ஆயிரத்து 625 மோட்டார் வாகனங்கள் பதிவுசெய்யபட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டில் நான்கு இலட்சத்து 93 ஆயிரத்து 328 மோட்டார் வாகனங்கள் பதிவுசெய்யபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் 2017 ஆம் ஆண்டில் வாகன பதிவுகள் சுமார் 45 ஆயிரத்தினால் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்