புதுவருட தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு

புதுவருட தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு

புதுவருட தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 4:02 pm

புதுவருட தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 23 மற்றும் 34 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை பல்லேவெல பகுதியில் டிப்பர் வாகனமும் சைக்கிளொன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொரலஸ்கமுவ – பெப்பிலியான பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

விபத்தில் 21 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

வென்னப்புவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 77 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், கொட்டதெனிய பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் மோட்டார் சைக்கிளொன்றும் கொள்கலன் வாகனமொன்றும் விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்