பாகிஸ்தானுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நிதியுதவிகள் இடைநிறுத்தம்

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நிதியுதவிகள் இடைநிறுத்தம்

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நிதியுதவிகள் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 4:33 pm

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நிதியுதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தீவிரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளை பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதனையும் பாகிஸ்தான் அரசு முன்னெடுக்கவில்லை என சமீப காலமாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

இதனையடுத்து பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த சில நிதியுதவிகளும் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டொலர்களை வழங்கிய அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக நினைத்து விட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டரில், கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தானுக்கு இனி நிதியுதவி கிடைக்காது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாஸி, தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் டெஹமினா ஜான்ஜூவா தெரிவித்துள்ளதுடன் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கம் அளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்