பம்பலபிட்டியவில் தனியார் விற்பனை நிலையமொன்றின் காட்சியறையில் தீ

பம்பலபிட்டியவில் தனியார் விற்பனை நிலையமொன்றின் காட்சியறையில் தீ

பம்பலபிட்டியவில் தனியார் விற்பனை நிலையமொன்றின் காட்சியறையில் தீ

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 1:38 pm

பம்பலபிட்டிய நகரின் தனியார் விற்பனை நிலையமொன்றின் காட்சியறையில் நேற்றிரவு தீ ஏற்பட்டுள்ளது

தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 07 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.

தெஹிவளை – கல்கிஸ்ஸை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினரின் உதவியும் இதற்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீயை நேற்று நள்ளிரவளவில் முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக கொழும்பு தீயணைப்பு சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்