நுவரெலியாவில் ஒரு கோடியே 45 இலட்சம் ரூபா கொள்ளை

நுவரெலியாவில் ஒரு கோடியே 45 இலட்சம் ரூபா கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 9:00 pm

நுவரெலியா பூங்கா வீதியில் ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் மூன்று பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிகரெட் விற்பனை நிறுவனமொன்றிலிருந்து வங்கியில் வைப்பிலிடுவதற்காக கொண்டுசெல்லப்பட்ட பணத்தையே சந்தேகநபர்கள் இன்று பகல் கொள்ளையிட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது வாகனத்தை ஓட்டிச் சென்றவர் மற்றும் பணத்தை மதிப்பீடு செய்து வழங்கியவர் உள்ளிட்ட மூன்று பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் கூறினர்.

பணத்தை கொள்ளையிட்டு சென்று முச்சக்கரவண்டியில் மூன்று பேர் பயணித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய முச்சக்கரவண்டி பயணித்த வீதியிலுள்ள சி.சி.ரி.வி கெமராக்களை சோதனையிடுவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் சென்று சந்தேகநபர்கள், பணத்தை கொண்டு சென்றவர்களின் முகங்களில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்