நாட்டிலுள்ள 64 பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை பூங்காக்களாக மாற்றியமைக்க தீர்மானம்

நாட்டிலுள்ள 64 பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை பூங்காக்களாக மாற்றியமைக்க தீர்மானம்

நாட்டிலுள்ள 64 பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை பூங்காக்களாக மாற்றியமைக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 4:17 pm

நாட்டிலுள்ள 64 பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை, பூங்காக்களாக மாற்றியமைப்பதற்கு நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு தீர்மானித்துள்ளது

இதற்கான பத்திரத்தை அடுத்த வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

பூங்காக்களாக மாற்றியமைக்கப்பட்டவுடன் சுற்றுலாப்பயணிகளுக்கு பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வருட திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தினூடாக வருமானம் ஈட்டப்படுவதுடன் சுற்றுசூழலும் பாதுகாப்படும் என நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்