தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடக நெறிகளை சமர்ப்பிக்கும் பிரேரணையில் பிரதமர் கையொப்பம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடக நெறிகளை சமர்ப்பிக்கும் பிரேரணையில் பிரதமர் கையொப்பம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 7:33 pm

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட, ஊடக விதிமுறைகளை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கையொப்பமிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழு 32 விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை அண்மையில் வௌியிட்டிருந்தது.

புதிய வருடத்தின் கடமைகளை ஆரம்பிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதனை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்