சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்  நாளை ஆரம்பம்

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பம்

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 4:24 pm

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன

10 நாட்களுக்கு தொடர்ந்து இந்த பணிகள் இடம்பெறவுள்ளன.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 105 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 35000 இற்கும் அதிக மதிப்பீட்டாளர்கள் கடமையிலீடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்தார்.

இதேவேளை மதிப்பீட்டுப் பணிகளின் பாதுகாப்பிற்காக 200 இற்கும் அதிக பொலிஸ் அதிகாரிகள் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

685000 பரீட்சார்த்திகள் இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்