சமூக வலைத்தளங்களில் தவறாக கருத்து பரிமாறி வருபவர்களுக்கு கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் தவறாக கருத்து பரிமாறி வருபவர்களுக்கு கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் தவறாக கருத்து பரிமாறி வருபவர்களுக்கு கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 5:32 pm

பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுபவர்களுக்கு கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறாக கருத்து பரிமாறி வருபவர்களுக்கு கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வணக்கம்.

பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும் என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும் தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும் நான் சொல்லியது மட்டுமே உண்மை என்று தமிழ் உலகம் நம்பும் என்று நம்புகிறேன்.

உண்மைக்கு வெளியே தங்கள் வாக்கியங்களை என் வாக்கியங்களாக வெளியிட்டுக்கொள்ளும் நண்பர்கள் நகைச்சுவைக்காக அப்படிச் செய்திருக்கக்கூடும். அவர்கள்மீது எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை. நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை அவர்களும் அறிவார்கள்; தமிழர்களும் புரிவார்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்