கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2 பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2 பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2 பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 1:57 pm

கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டு பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் மற்றும் தொழிநுட்ப பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சிலரே இவ்வாறு வகுப்புத் தடைக்குட்பட்டுள்ளனர்.

சில காலமாக தொடரும் பல்வேறு கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்றதால் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதல் நிலைமையைத் தொடரந்து இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கின்றது.

மோதலில் 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் இது வரை குறித்த இரு பீடங்களினதும் வகுப்புத் தடைக்குள்ளான மாணவர்களது வகுப்புத் தடையை அகற்றக் கோரி பிரதான நிர்வாக கட்டடத் தொகுதியில் கடந்த 07 நாட்களாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பல்கலைக்கழக நிர்வாக வேண்டுகோளுக்கமைய குறித்த கட்டடத் தொகுதியில் தங்கியிருப்பதற்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அது அறிவித்தற் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்