கடற்படை மற்றும் CH & FC அணிகளுக்கிடையில் வாய்த்தர்க்கமே இடம்பெற்றது – CH & FC அணி முகாமையாளர்

கடற்படை மற்றும் CH & FC அணிகளுக்கிடையில் வாய்த்தர்க்கமே இடம்பெற்றது – CH & FC அணி முகாமையாளர்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 10:05 pm

லீக் றக்பி தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கடற்படை மற்றும் சீ.எச் & எப்.சி அணிகளுக்கிடையிலான போட்டியின் போது இடம்பெற்ற மோதல் தொடர்பாக தமக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என இலங்கை றக்பி சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஹான குணரத்ன கூறியுள்ளார்.

முதல்தர கழகங்களுக்கு இடையிலான லீக் றக்பி தொடரில் கடற்படையும், சீ.எச் & எப்.சி அணியும் வெலிசறையில் விளையாடிய போட்டியின் போது வீரர்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றது.

சீ.எச் & எப்.சி அணி வீரரான யோஷித ராஜபக்ஸவும் அணியின் உதவியாளராக செயற்பட்ட நாமல் ராஜபக்ஸவும் இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டிருந்தமை கமராக்களில் பதிவாகியிருந்தது.

எவ்வாறாயினும், அணி வீரரல்லாத ஒருவர் எவ்வாறு அணியின் உதவியாளராக செயற்பட முடியும் என்ற சந்தேகம் பெரும்பாலானோருக்கு எழுந்தது.

இதேவேளை, குறித்தப் போட்டியில் வீரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் மாத்திரம் இடம்பெற்றதாக சீ.எச் & எப்.சி அணியின் முகாமையாளரான தம்மிக மெதகெதர கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்