ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 6:03 pm

பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டது.

இறுதி அறிக்கை 1135 பக்கங்களை கொண்டமைந்துள்ளது.

இந்த அறிக்கை ஆணைக்குழுவின் தலைவர் பீ.பத்மன் சுரசேனவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச மற்றும் ஏனைய உறுப்பினர்களான விகும் களுஆராய்ச்சி, ஆர். ரணசிங்க, கிஹான் குலதுங்க, பீ.ஏ. பிறேமதிலக்க ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்