துர்க்மெனிஸ்தானில் கறுப்புக் கார்களுக்கு தடை: வௌ்ளை ராசிக்கார அதிபர் மீது ஆத்திரத்தில் மக்கள்

துர்க்மெனிஸ்தானில் கறுப்புக் கார்களுக்கு தடை: வௌ்ளை ராசிக்கார அதிபர் மீது ஆத்திரத்தில் மக்கள்

துர்க்மெனிஸ்தானில் கறுப்புக் கார்களுக்கு தடை: வௌ்ளை ராசிக்கார அதிபர் மீது ஆத்திரத்தில் மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

17 Jan, 2018 | 3:57 pm

துர்க்மெனிஸ்தான் நாட்டில் கறுப்பு நிற காரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை பொதுமக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடு துர்க்மெனிஸ்தான். இதன் தலைநகரான அஸ்காபாத்தில் கறுப்பு நிற கார்களை ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி ஓட்டினால் அவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. காரின் நிறத்தை வெள்ளையாக மாற்றி விடுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் தான் கார்கள் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன.

கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் இந்நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளது.

பொலிஸாரின் இச்செயல் கறுப்பு நிற கார் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அதிபர் குர்பங்குலி பெர்டிமுகமே தோவ் காரணம் என கருதப்படுகிறது. இவருக்கு வெள்ளை நிறம் தான் ராசியாம். இவர் அதிபராவதற்கு முன்பு பல் மருத்துவராக இருந்துள்ளார்.

தற்போது இவர் தனது வீட்டையும் அலுவலகத்தையும் வெள்ளை நிறத்தில் மாற்றி விட்டார். வெள்ளைக் குதிரைகளை வைத்துள்ளார். வெள்ளை ஆடைகளை அணிகிறார். வெள்ளை தரை விரிப்புகள், வெள்ளை பூக்கள் நிறைந்த ஜாடிகள் என எங்குமே வெள்ளை நிறமாகக் காட்சி அளிக்கிறது.

கார்களின் நிறங்களை வௌ்ளையாக மாற்ற வேண்டும் என்ற உத்தரவால் அங்கே வௌ்ளை பெயிண்ட்டின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

கார்களில் நிறத்தை மாற்ற அதிக செலவு ஆவதால் அதிபர் மீது பொதுமக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.