சைபீரியாவில் வாட்டி வதைக்கும் குளிர்: வெப்பநிலை மைனஸ் 60 டிகிரி செல்சியஸ்

சைபீரியாவில் வாட்டி வதைக்கும் குளிர்: வெப்பநிலை மைனஸ் 60 டிகிரி செல்சியஸ்

சைபீரியாவில் வாட்டி வதைக்கும் குளிர்: வெப்பநிலை மைனஸ் 60 டிகிரி செல்சியஸ்

எழுத்தாளர் Bella Dalima

19 Jan, 2018 | 5:23 pm

பூமியின் உச்சகட்ட குளிர் பிரதேசமாக சைபீரியா உள்ளது. அங்கு தற்போது குளிர் வாட்டி வதைக்கின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு அங்கு பனிப்பொழிவு அதிகளவில் நிலவுகிறது. அங்கு வெப்பநிலை மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் ஆகவுள்ளது.

கடுமையான குளிர் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதி வரையில் குளிர் அலைகள் தற்போது இருப்பது போலவே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மிக அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், மின் உற்பத்தி அமைப்புகளுக்கு அரசாங்கம், அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது.