ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவி விலகும் செக் குடியரசின் பிரதமர்

ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவி விலகும் செக் குடியரசின் பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

17 Jan, 2018 | 9:55 pm

ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக செக் குடியரசின் பிரதமர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செக் குடியரசின் பிரதமர் Andrej Babis மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் அவர் போதுமான வாக்குகளைப் பெறாத நிலையில், பதவியைத் துறக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

செக் குடியரசிற்காக பெறப்பட்ட நிதியுதவியில் முறைகேடுகள் இடம்பெற்றதாக அந்நாட்டின் பிரதமர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இலங்கையிலும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று, பலர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இதுவரை எவரும் பதவி விலகவில்லை.

இந்நிலையில், முறிகள் மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு தற்போது அது பகிரங்க ஆவணமாக வௌியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை இன்று பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் இணையத்தளத்திலும் அந்த அறிக்கை பதிவிடப்பட்டுள்ளது.

அதனை கீழ்காணும் தொடுப்பில் காணலாம்…

https://goo.gl/55d3X8