விவசாயிகளுக்கான உரத்தை பெற்றுக்கொள்ள  250 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி தெரிவிப்பு

விவசாயிகளுக்கான உரத்தை பெற்றுக்கொள்ள 250 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

விவசாயிகளுக்கான உரத்தை பெற்றுக்கொள்ள 250 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2017 | 10:48 am

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு 250 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உரத்தை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிதி, வங்கிகளுக்கு கிடைக்கவில்லை என தகவல் வௌியானதை அடுத்து, குறித்த நிதியை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு இடுமாறு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

நேற்று பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு, பிரதேசத்தின் அபிவிருத்தி முன்னெடுக்கப்படும் போது அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் யோசனை மற்றும் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என அவர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி பணிகளுக்கு போதுமான நிதி கையிருப்பிலுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்