ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு கமல், அமிதாப் வாழ்த்து

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு கமல், அமிதாப் வாழ்த்து

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு கமல், அமிதாப் வாழ்த்து

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2017 | 5:34 pm

அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பலரும் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக…’ என்று பதிவு செய்திருக்கிறார்.

இதேவேளை அரசியலுக்கு வருவது உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, பாலிவுட் நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்போது பாலிவுட் நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என்னுடைய நெருங்கிய நண்பரும், சக ஊழியரும், எளிமையான மனிதருமான ரஜினிகாந்த், அரசியலில் நுழைவதற்கான தனது முடிவை அறிவித்திருக்கிறார். அவரது வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!!’ என்று பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் சமயத்தில் அவர் அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று பரவலாக பேசப்பட்டுவருகிறது.

இந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

6 ஆவது நாளான இன்று தென்சென்னை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ரசிகர்களுடனான சந்திப்பின் கடைசி நாளான இன்று ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்