மயிலம்பாவௌியில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைந்திருந்த சுமார் 3 ஏக்கர் காணி விடுவிப்பு

மயிலம்பாவௌியில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைந்திருந்த சுமார் 3 ஏக்கர் காணி விடுவிப்பு

மயிலம்பாவௌியில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைந்திருந்த சுமார் 3 ஏக்கர் காணி விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2017 | 7:48 pm

மட்டக்களப்பு மயிலம்பாவௌி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனை சாவடி இன்று அகற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த சோதனை சாவடி அமைந்திருந்த சுமார் 3 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததை அடுத்து குறித்த காணியை ஏறாவூர் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

மயிலம்பாவௌி பகுதியில் உள்ள இந்தக் காணியில் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவம் நிலைக்கொண்டிருந்தது.

இந்த காணி தனியார் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டு பின்னர் அறக்கட்டளையை நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இராணுவத்தினர் காணியிலிருந்து வௌியேறியதன் பின்னர் ஏறாவூர் பொலிஸார் அந்த இடத்தை கையகப்படுத்தி அங்கு நிலையான கட்டடத்தை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

எனினும் குறித்த அறக்கட்டளையின் நிர்வாகத்தினரின் தலையீட்டால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அறக்கட்டளையினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அறப்போராட்டத்தின் விளைவாக அந்த காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்