சட்டவிரோத வானொலி சேவை நிறுவனமொன்று தெரணியகலயில் சுற்றிவளைப்பு

சட்டவிரோத வானொலி சேவை நிறுவனமொன்று தெரணியகலயில் சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2017 | 7:46 pm

தெரணியகல நகரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த, வானொலி சேவையொன்று, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினரால் இன்று சுற்றிவளைக்கப்பட்டது.

நவீன சோதனை உபகரணங்களைப் பயன்படுத்தி, இந்த வானொலி சேவை நிறுவனத்தை ஆணைக்குழுவினர் இன்று சுற்றிவளைத்தனர்.

தெரணியகல பகுதியில் சட்டவிரோத வானொலி சேவையை முன்னெடுத்துச் சென்ற நான்கு பேர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வானொலி சேவையை முன்னெடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழிநுட்ப உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் அனுமதி பத்திரமின்றி, இலங்கை வானொலி சேவை அலைக்கற்றை சட்டத்திற்கு முரணாக, இந்த வானொலி சேவை இயங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்