English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Dec, 2017 | 8:26 pm
புத்தளம் அறுவாக்காடு கழிவு சேகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக சீனாவின் நிறுவனம் ஒன்றுடன் கையொப்பமிட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி கொழும்பின் குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
கொழும்பில் நாளாந்தம் சுமார் 1000 மெட்ரிக் தொன் குப்பை சேகரிக்கப்படுவதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரத்ன தெரிவித்தார்.
இவ்வாறு கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை ரயிலில் புத்தளத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தப் பின்புலத்தில் புத்தளம் அறுவாக்காடு கழிவு சேகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக சீனாவின் நிறுவனம் ஒன்றுடன் கையொப்பமிட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
சர்வதேச கொள்முதல் விதிமுறைகளுக்கு அமைய இந்த நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டார்.
சன்யா ஹாபர் நிறுவனத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் திட்டத்தின் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
அத்துடன் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டன.
இதேவேளை கொழுப்பின் குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு வரவேண்டாம் என வலியுத்தி புத்தளம் மாவட்ட மக்கள் பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
புத்தளம் மாவட்டத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகி பல விபரீதங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலே இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகள் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படுதில்லையெனவும் கொழும்பின் குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டுவர வேண்டாம் எனவும் அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.
28 Jan, 2021 | 07:41 AM
21 Jan, 2021 | 09:59 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS