கடவத்தயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

கடவத்தயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

கடவத்தயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2017 | 10:49 am

கடவத்த ரன்முதுகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் இல்லத்திற்கு சென்ற அடையாளந்தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ரன்முதுகல பகுதியை சேர்ந்த 37 வயதான ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்