ஒருகொடவத்தையிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீ பரவியது

ஒருகொடவத்தையிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீ பரவியது

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2017 | 7:27 pm

கொழும்பு ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கு அருகிலுள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று தீ பரவியது.

இன்று பகல் 12.45 அளவில் தீ பரவியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஆறு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்