இந்திய மீனவர்கள் 13 பேர் கைது

இந்திய மீனவர்கள் 13 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2017 | 11:18 am

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 13 இந்திய மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்று யாழ் கடற்றொழில் திணைக்களத்திடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்