ஆலையடிவேம்பு பகுதியில் 8 வயது சிறுமி துஷ்பிரயோகம்

ஆலையடிவேம்பு பகுதியில் 8 வயது சிறுமி துஷ்பிரயோகம்

ஆலையடிவேம்பு பகுதியில் 8 வயது சிறுமி துஷ்பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2017 | 7:02 pm

சிறுவர் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவை சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளதா என்பது கேள்விக்குரியே!

நாட்டில் நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அம்பாறை ஆலையடிவேம்பு பகுதியில் 8 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது.

தாயின் இழப்பின் பின்னர் பெரியம்மா வீட்டில் குறித்த சிறுமி பராமரிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் தனது சிறிய தந்தையால் குளக்கரைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுதி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் 30 வயதான குறித்த சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்