அரசியலுக்கு வருவது உறுதியென நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

அரசியலுக்கு வருவது உறுதியென நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

அரசியலுக்கு வருவது உறுதியென நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2017 | 10:46 am

அரசியலுக்கு வருவது உறுதியென நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார்.

இது காலத்தின் கட்டாயமென தெரிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட குழப்பங்களுக்கு மத்தியில் பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரது எதிர்ப்பார்ப்புகளுக்கும் மத்தியில் தனது தீர்மானத்தை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இறைவனின் ஆசியும் மக்களின் ஆதரவும் தமக்கு கிடைக்குமெனவும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்