இதுவரையில் வட மாகாண சபை தேர்தல் பற்றி சிந்திக்கவில்லை என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

இதுவரையில் வட மாகாண சபை தேர்தல் பற்றி சிந்திக்கவில்லை என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2017 | 8:46 pm

தனது பெயரை இழுத்து கட்சிகள் சார்பிலும், தனிப்பட்ட வேட்பாளர்கள் சார்பிலும் நன்மைகளைபெற பலர் எத்தனிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வடமாகாண சபைத்தேர்தல் பற்றி தான் எவ்வித முடிவும் எடுக்காமலேயே சின்னம் பற்றி கருத்துக்கள் வௌிவருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழலற்ற, நேர்மையான, தகமையுடைய மக்களை நேசிக்கும வேட்பாளர்களுக்கு வாக்கினை வழங்குமாறு தான் ஏற்கனவே கோரியுள்ளதாகவும், ஏற்கனவே அரசியல்வாதிகளும் அரசியலும் புகுந்து கூட்டுறவு சங்கங்களை சின்னா பின்னமாக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தான் இதுவரையில் வட மாகாண சபை தேர்தல் பற்றியோ கட்சி, சின்னம் பற்றியோ சிந்திக்கவில்லை எனவும்,தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களுடன் ஒத்த கருத்துடையவர்களை மதிப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்