முல்லைத்தீவில் இன்புளுவென்ஸா பீ வைரஸ் காரணமாக 09 பேர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் இன்புளுவென்ஸா பீ வைரஸ் காரணமாக 09 பேர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் இன்புளுவென்ஸா பீ வைரஸ் காரணமாக 09 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2017 | 2:04 pm

முல்லைத்தீவில் இன்புளுவென்ஸா பீ வைரஸ் தொற்று காரணமாக கடந்த மாதத்தில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் தற்போது வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்று குறித்து ஆராய்வதற்கு கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று அழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக மாகாண சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் டொக்டர் கேசவன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ் நகரில் அண்மையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எவ்வித வைரஸ் தொற்றுகளும் காரணமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற வகையில் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் டொக்டர் கேசவன் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்