கேப்பாப்புலவில் படையினர் வசமிருந்த 133 ஏக்கர் காணி விடுவிப்பு

கேப்பாப்புலவில் படையினர் வசமிருந்த 133 ஏக்கர் காணி விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2017 | 8:47 pm

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் படையினர் வசமிருந்த 133 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது.

கேப்பாப்புலவில் படையினர் வசமிருந்த 133 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு 148 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்ட கேப்பாப்புலவு காணியில் அடுத்த வருடம் 85 குடும்பங்களை மீள்குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று இராணுவ முகாம் அமைந்துள்ள ஒரு பகுதி காணி மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோப்பாபுலவில் படையினர் வசமுள்ள விடுவிக்கப்படாத காணிக்கு பதிலாக மாற்று காணியை வழங்குமாறு கோரி மகஜர் கையளிக்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறியுள்ளனர்.

போராட்டதில் ஈடுபட்டுள்ள மக்கள் மகஜர் கையளித்த நபரின் வீட்டிற்கு சென்றவேளை குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக எமது பிராந்திய செயதியாளர் தெரிவித்தார்.

தமது பூர்வீக காணியை முற்றாக விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்