கேப்பாபுலவில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

கேப்பாபுலவில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

கேப்பாபுலவில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2017 | 1:48 pm

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள 133 ஏக்கர் காணி இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது ஏனைய பூர்வீக காணிகளையும் விடுவிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இன்றைய தினம் விடுவிக்கப்பட்ட காணியில் இருந்த இராணுவ முகாமை இடமாற்றுவதற்கு இராணுவதற்தினரால் 148 மில்லியக் ரூபா கோரப்பட்டது.

இந்த நிதியை மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக வழங்கியதை அடுத்து காணியை விடுவிக்க பாதுகாப்பு படையினர் இணக்கம் தெரிவித்ததாக மீள்குடியேற்ற அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று இராணுவ முகாம் அமைந்துள்ள காணி மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமது பூர்வீக காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்